10 ஆயிரம் கடிதங்கள் அனுப்பும் நூதன போராட்டம்


10 ஆயிரம் கடிதங்கள் அனுப்பும் நூதன போராட்டம்
x

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதிக்கு 10 ஆயிரம் கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதிக்கு 10 ஆயிரம் கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சமுக நீதி மாநாட்டில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டு நல துறை அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது இந்திய அளவில் மிகப் பெரிய பேசு பொருளானது.

இதை கண்டிக்கும் விதமாக வந்தவாசி பாரதிய ஜனதா கட்சியினர் நூதன முறையில் தமிழக அமைச்சர் உதயநிதிக்கு தினமும் ஆயிரம் கடிதம் அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதிக்கு தினமும் ஆயிரம் கடிதம் அனுப்பும் நூதன போராட்டத்தை வந்தவாசியில் பா.ஜ.க.வினர் முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்திற்கு பா.ஜ.க.நகரத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குருலிங்கம், துரைநாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வந்தவாசியில் இருந்து தினமும் ஆயிரம் கடிதம் என 10 நாட்களுக்கு 10 ஆயிரம் கடிதம் அனுப்பப்படும் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

போராட்டத்தில் மாவட்ட தலைவர் குணசேகரன், நகரத் துணை தலைவர் நாராயணன், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story