1,008 தீபம் ஏற்றி ஊஞ்சல் சேவை


1,008 தீபம் ஏற்றி ஊஞ்சல் சேவை
x

போடி சீனிவாச பெருமாள் கோவிலில் 1,008 தீபம் ஏற்றி ஊஞ்சல் சேவை நடந்தது.

தேனி

போடி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று மாலை 1,008 தீபங்கள் ஏற்றி சகஸ்ர தீப ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் பெருமாள் மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சலில் அமர வைத்து சுற்றிலும் 1,008 தீபங்கள் ஏற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story