குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம்


குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம்
x

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம்

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இந்த தலம், நவக்கிரகங்களில் ஒன்றான குருபகவானுக்கு பரிகார தலமாக போற்றப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வியாழக்கிழமையை ஒட்டி நேற்று குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட 1,008 சங்குகள் வைத்து யாகபூஜைகள் நடத்தப்பட்டது. மதியம் மூலவர் குரு தட்சிணாமூர்த்திக்கு 1,008 சங்காபிஷேகம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் குருபகவான் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story