சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் 1008 சுமங்கலி பூஜை


சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் 1008 சுமங்கலி பூஜை
x

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் 1008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் இரண்டாம் நாள் கொடை விழாவான நேற்று காலை சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் போட்டி நடந்தது. மாலையில் ஆசிரியர் முத்து செல்வி சமய சொற்பொழிவு நடத்தினார். இரவில் சுடலை ஆண்டவர் மகளிர் சேவா சங்கம் சார்பில் 1008 சுமங்கலி பூஜை நடந்தது. கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் தலைமையில் திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான வக்கீல் ஏ.கே.சீனிவாசன் மாங்கல்ய பொருட்கள் அடங்கிய தாம்பூலத்தை கொடுத்து சுமங்கலி பூஜையை தொடங்கி வைத்தார். அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலை முன்பு பெண்கள் சுலோகங்கள் சொல்லி வழிபாடு செய்தனர்.

விழாவில் தொழில் அதிபர் தங்கையா கணேசன், கே.டி.பி.ராஜன், திசையன்விளை பேரூராட்சி முன்னாள் தலைவர் புஸ்பலெட்சுமி கனகராஜ், கடை வியாபாரிகள் சங்க செயலாளர் ஜெயராமன், வக்கீல் பழனி சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story