1,008 பால்குடம் எடுத்து பெண்கள் வழிபாடு


1,008 பால்குடம் எடுத்து பெண்கள் வழிபாடு
x

1,008 பால்குடம் எடுத்து பெண்கள் வழிபாடு செய்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 6-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக 1,008 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். இதையடுத்து சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் தேர் சுற்றிவரும் நிகழ்ச்சியும் நடந்தது. தேரில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இஸ்லாமிய தம்பதியர், இந்து பக்தர்களுடன் இணைந்து மத நல்லிணக்கத்துடன் தேரை இழுத்து தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சிறப்பு ஆராதனை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் அருப்புக்கோட்டை, பந்தல்குடி, வாழ்வாங்கி, சேதுராஜபுரம், சிதம்பராபுரம், கொப்புசித்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பந்தல்குடி சாய்ராம் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் மனிததேனீ சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.


Next Story