40 கொலை வழக்குகளில் 102 பேர் கைது
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடந்த 40 கொலை வழக்குகளில் 102 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.3½ கோடி நகைகள், பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடந்த 40 கொலை வழக்குகளில் 102 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.3½ கோடி நகைகள், பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
செல்போன்கள் ஒப்படைப்பு
கோவை மாவட்டத்தில் தொலைந்து போன 146 செல்போன் களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு ரூ.24 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான செல்போன்க ளை உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் (2022) பொதுமக்கள் தொலைத்த ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 750 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் புதிதாக 705 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
இதுவரை மொத்தம் 11,029 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
போக்சோ வழக்குகள்
கோவையில் கடந்த ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 218 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 239 பேர் கைது செய்யப்பட்ட னர். 261 போக்சோ வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 18 வழக்குகளில் சிறை தண்டனை விதிக் கப்பட்டு உள்ளது.
கொலை, கொள்ளை, தொடர் வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல் களில் ஈடுபட்டு வந்த 38 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 35 கொலை, 5 ஆதாய கொலை என மொத்தம் 40 கொலைகள் நடைபெற்றது. இதில் தொடர்புடைய 102 பேர் கைது செய்யப்பட் டனர். 2021-ம் ஆண்டு 51 கொலை, 5 ஆதாய கொலைகள் நடைபெற்றதில் 88 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளை
கடந்த ஆண்டு நடந்த 4 கொள்ளை சம்பவங்களில் 29 பேர் கைது செய்யப்பட்டனர். 80 வழிப்பறி சம்பவங்களில் 157 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஆண்டு ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருட்கள் திருடு போனது. இதில் ரூ.3 கோடியே 63 லட்சம் மதிப்பிலான நகை, பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது.
495 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 664 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட 95 இருசக்கர வாகனங்கள், 16 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
687 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 9 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கஞ்சா, புகையிலை
கடந்த 2021-ம் ஆண்டு 186 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு 351 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 2022-ம் ஆண்டு 1,025 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 ஆயிரத்து 444 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தடையை மீறி லாட்டரி விற்ற 375 பேர் மீது 320 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. ரூ.20 லட்சத்து 28 ஆயிரம் பணம், 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.