கடந்த ஆண்டில் ரூ.6 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கடந்த ஆண்டில் ரூ.6 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 29 May 2022 9:09 AM IST (Updated: 29 May 2022 9:11 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் போதை பொருட்கள் இருக்க கூடாது என்பதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

சென்னை,

நாடுமுழுவதும் ஆண்டுதோறும் மே 31-ந்தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற நடைபயண நிகழ்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் மா சுப்ரமணியன், "உலக புகையிலை நாளை முன்னிட்டு, போதை ஒழிப்பிற்கு விழிப்புணர்வு பேரணி தொடங்கப்பட்டுள்ளது. 2013 மே முதல் குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு, ஓராண்டு காலத்தில் மட்டும் ரூ.6.8 கோடி மதிப்பில்102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 36 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் பிரத்யேக மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விதிகளுக்கு புறம்பாக குட்கா, பான் மசாலா விற்ற 3,063 கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு 21 கடைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் முனைப்புடன் இருக்கிறார். மேலும் 100% போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.


Next Story