பழங்குடியினர் உள்பட 1,021 பேருக்கு தனிநபர் வன உரிமை பாத்தியம்


பழங்குடியினர் உள்பட 1,021 பேருக்கு தனிநபர் வன உரிமை பாத்தியம்
x

ஜமுனாமரத்தூர் தாலுகாவில் பழங்குடியினர் உள்பட 1,021 பேருக்கு தனிநபர் வனஉரிமை பாத்தியம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

ஜமுனாமரத்தூர் தாலுகாவில் பழங்குடியினர் உள்பட 1,021 பேருக்கு தனிநபர் வனஉரிமை பாத்தியம் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக வன உரிமை

2006-ம் ஆண்டு வன உரிமை சட்டத்தின் கீழ் வனப்பகுதியில் பாரம்பரியமாக வசித்து வரும் பழங்குடியின பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளுக்கு வனப்பகுதி நிலத்தில் சாகுபடி மேற்கொள்ள தனிநபர் வன உரிமையும்,

வன பகுதியில் சிறு வனப்பொருட்களான நெல்லி, புளி, கடுக்காய், தேன், பூந்திக்கொட்டை போன்ற பொருட்களை சேகரிப்பதற்கான சமூக வன உரிமையும் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி, 2006-ம் ஆண்டு வன உரிமை சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த ஜமுனாமரத்தூர் தாலுகாவில் தகுதியுள்ள அனைவருக்கும் வன உரிமை பாத்தியம் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1021 பேர்

அதன்படி மாவட்ட அளவில் 25 குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு போளுரில் 3 கிராமங்கள், சந்தவாசலில் 11 கிராமங்கள், ஜமுனாமரத்தூரில் 49 கிராமங்கள் உள்ளிட்ட ஆரணி வருவாய் கோட்டத்தினை சார்ந்த 154 கிராமங்களை சார்ந்த வனச்சரக பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியின பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளிகளுக்கு 39,522.23 ஹெக்டேர் பரப்பளவு வன நிலத்திற்கு சமூக வன உரிமை பாத்தியம் வழங்கப்பட்டுள்ளது.

ஜமுனாமரத்தூர் தாலுகாவில் 1,021 பழங்குடியின பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகளுக்கு வனப்பகுதி நிலத்தில் சாகுபடி மேற்கொள்ள தனிநபர் வன உரிமை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வன உரிமை கோரி வரப்பெற்று தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு மூலம் சீராய்வு செய்யப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் தனி நபர் வன உரிமை பாத்தியம் அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story