ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10,22,802 வாக்காளர்கள்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10,22,802 வாக்காளர்கள்
x

ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். அதன்படி 10,22,802 வாக்காளர்கள் உள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். அதன்படி 10,22,802 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வரைவு‌ வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது :-

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31.12.2004 அன்று வரை பிறந்தவர்கள்) தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயது தகுதி ஏற்படுத்தும் நாளாக ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி முதலாம் நாளினை, ஜனவரி முதலாம் நாள், ஏப்ரல் முதலாம் நாள், ஜூலை முதலாம் நாள் மற்றும் அக்டோபர் முதலாம் நாள் என 4 தகுதியேற்படுத்தும் நாட்களாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் செய்திட விண்ணப்பம் செய்த அனைவரின் விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, வாக்காளர் விவரங்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா, நகராட்சி அலுவலகங்கள் உள்பட 620 மையங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

10,22,802 வாக்காளர்கள்

இந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக வாக்காளர் எண்ணிக்கை கீழ்வருமாறு:-

அரக்கோணம் (தனி): ஆண்கள் -1,09,595, பெண்கள்- 1,15,653, மூன்றாம் பாலினத்தவர்- 18. மொத்த வாக்காளர்கள் -2,25,266.

சோளிங்கர்: ஆண்கள்-1,35,277, பெண்கள் -1,41,184, மூன்றாம் பாலினத்தவர் -13 மொத்தம் - 2,76,474.

ராணிப்பேட்டை: ஆண்கள் - 1,25,783, பெண்கள் - 1,34,470, மூன்றாம் பாலினத்தவர் -22, மொத்தம் -2,60,275.

ஆற்காடு: ஆண்கள் -1,26,845, பெண்கள் - 1,33,916, மூன்றாம் பாலினத்தவர் -26, மொத்தம் - 2,60,787.

ஆக மொத்தம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்கள் -4,97,500, பெண்கள் - 5,25,223, மூன்றாம் பாலினத்தவர் - 79 என மொத்தம் 10,22,802 வாக்காளர்கள் உள்ளனர்.

பெயர் சேர்க்கலாம்

இன்று முதல் வருகிற 8.12.22-ந் தேதி வரை படிவங்கள் பெறும் பணியை அனைத்து சிறப்பு மையங்களிலும் மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி படிவங்கள் பெற்றிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்து, பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் செய்து கொள்ள உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள www.iivsp.in என்ற இணையதன முகவரி மூலமாகவும் இணைய சேவையை பயன்படுத்தி வாக்காளர் பட்டியல் தொடர்பான சேவைகளை பெறலாம். மேலும் ஆன்ட்ராய்டு போன் மூலாக voter helpline-App என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருப்பவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை வாக்காளர் பட்டியலைப் பார்த்து குறித்துக்கொண்டு படிவம் 8-ல் திருத்தம் இல்லாத மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தால் தங்களுக்கு அஞ்சலில் வாக்காளர் அடையான அட்டை அனுப்பி வைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.


Next Story