திருடு போன 104 செல்போன்கள் மீட்பு


திருடு போன 104 செல்போன்கள் மீட்பு
x

நாமக்கல் மாவட்டத்தில் திருடு போன 104 செல்போன்கள் மீட்கப்பட்ட நிலையில், அவற்றின் உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் ஒப்படைத்தார்.

நாமக்கல்

செல்போன்கள் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் செல்போன் திருடு போனதாக பல்வேறு நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தொலைந்து போன ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 104 செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.

புகார் தெரிவிக்கலாம்

பின்னர் அவர் பேசும்போது, செல்போன்களை அஜாக்கிரதையாக வாகனங்களிலோ அல்லது பைகளிலோ வைத்து விட்டு செல்ல கூடாது. பொதுமக்கள் பழைய செல்போன்களை வாங்கும்போது, அந்த செல்போன்களுக்கு உரிய அசல் ரசீதுடன் வாங்க வேண்டும். செல்போன் காணாமல் போனால் உடனடியாக, சி.இ.ஐ.ஆர். போர்டல் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் ஆன்லைன் மோசடி, ஏ.டி.எம். மோசடி, சமூக வலைதள மோசடி போன்றவை குறித்து 1930 என்கிற எண்ணிற்கும், www.cybercrime.gov.in என்கிற வலைதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.


Next Story