கொரோனாவால் பாதிக்கப்பட்ட 106 பேருக்கு சிகிச்சை


கொரோனாவால் பாதிக்கப்பட்ட 106 பேருக்கு சிகிச்சை
x

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 106 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 75 ஆயிரத்து 531 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 13 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட கீரப்பாளையம், சிவக்கம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், கடலூரை சேர்ந்த 6 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நல்லூர், என்.எல்.சி., குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், புவனகிரி, பண்ருட்டியை சேர்ந்த 7 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. நேற்று முன்தினம் வரை 74 ஆயிரத்து 533 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்ற நிலையில், நேற்று 10 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 102 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும், 4 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story