108 பால்குடம் ஊர்வலம்


108 பால்குடம் ஊர்வலம்
x
தினத்தந்தி 26 Sep 2023 6:45 PM GMT (Updated: 26 Sep 2023 6:46 PM GMT)

108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தில் உள்ள அரியநாச்சி அம்மன் கோவில் வருடாந்திர புரட்டாசி மாத செவ்வாய் கொழுக்கட்டை திருவிழாவை முன்னிட்டு 108 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக ஆப்பனூர் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால்குடங்களை சுமந்து கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அரியநாச்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து ஆப்பனூர் கிராமத்தில் மையப் பகுதியில் பக்தர்கள் தங்களது வீடுகளில் கொழுக்கட்டை அவித்து, அம்மனுக்கு படையில் இட்டு, அக்னி சட்டி, மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிையயொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story