108 ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம்


108 ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம்
x

ஏற்காடு 108 ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சேலம்

ஏற்காடு:

ஏற்காடு அருகே காவேரிபீக் கிராமத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில் பணிபுரிந்து வருபவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நித்திஷ். இவருடைய மனைவி முகில்டியோ முண்டோ (வயது 20). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் காலை 7.30 மணி அளவில் முகில்டியோ முண்டோவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்ேபரில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் செல்வகுமார் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் சிகாமணி ஆகியோர் அங்கு விரைந்து சென்று உள்ளனர். அதன் பின்னர் முகில்டியோ முண்டோவை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு நாகலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் முகில்டியோ முண்டோவிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் ஆம்புலன்சை வழியில் நிறுத்தி மருத்துவ உதவியாளர் சிகாமணி பிரசவம் பார்த்துள்ளார். அப்போது முகில்டியோ முண்டோவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் தாய் மற்றும் குழந்தையை நாகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு தாய், சேய் நலமுடன் உள்ளனர். அவசர நிலையில் ஆம்புலன்சில் பிரசவம் பார்த்து தாய், குழந்தையை காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் சிகாமணி மற்றும் டிரைவர் செல்வகுமார் ஆகியோரை முகில்டியோ முண்டோ குடும்பத்தினர் பாராட்டினார்கள்.


Next Story