திருநகரி யோக நரசிம்மருக்கு 108 கலச அபிஷேகம்


திருநகரி யோக நரசிம்மருக்கு 108 கலச அபிஷேகம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சுவாதி நட்சத்திரத்தையொட்டி திருநகரி யோக நரசிம்மருக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் இந்த கோவிலில் எழுந்தருளி திருக்கல்யாணம் செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகின்றன. மேலும் இங்கு பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் இரண்ய நரசிம்மர்களுக்கு தனி சன்னதி உள்ளது. நேற்று முன் தினம் ஆனி மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி யோக நரசிம்மருக்கு 108 கலசபிஷேக வழிபாடு நடந்தது. முன்னதாக 108 கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சுதர்சன யாகம் நடந்தது. பின்னர் கலச அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், ஸ்ரீதர் பட்டாச்சாரியார் மற்றும் பத்மநாப பட்டாச்சாரியார் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story