குளித்தலை நீலமேகப்பெருமாள் கோவிலில் 108 கலச பூஜை


குளித்தலை நீலமேகப்பெருமாள் கோவிலில் 108 கலச பூஜை
x

குளித்தலை நீலமேகப்பெருமாள் கோவிலில் 108 கலச பூஜை நடந்தது.

கரூர்

குளித்தலையில் உள்ள நீலமேகப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஜயேஷ்டாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையொட்டி காலை சங்கல்பம், புண்யாகவாஜனம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 கலச பூஜை, விசேஷ ஹோம பூஜை நடைபெற்றது. இதையடுத்து 108 கலச அபிஷேகம் உற்சவ பெருமாளுக்கு செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story