சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்


சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
x

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்

தஞ்சாவூர்

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பங்குனி உத்திரத்திருவிழா

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி வள்ளி, தேவசேனை, சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா நடந்தது. தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. விழாவில் கடந்த 8-ந் தேதி அரசலாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி, அலவந்திபுரம் நடுத்தெருவில் இருந்து சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சி, சண்முக பெருமாள்-வள்ளிநாயகியார் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றது. 9, 10-ந்தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சியும், 11-ந்தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.

சங்காபிஷேகம்

விழாவில் நிறைவாக நேற்றுமுன்தினம் சண்முக பெருமாளுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதிஉலாவும் நடைபெற்றது. பின்னர் யாதா ஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணை ஆணையர் மோகனசுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story