109 பேருக்கு குற்ற சரித்திர பதிவேடு தொடக்கம்

நெல்லை மாவட்டத்தில் 109 பேருக்கு குற்ற சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், போலீசார் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். மேலும் முன்னெச்சரிக்கையாக குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பிணை பத்திரங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படுகிறவர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படுகிறது.
கடந்த 6 மாதத்தில் கொலை, கொள்ளை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்களில் 109 பேருக்கு சட்ட விதிகளுக்குட்பட்டு குற்ற சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story