வரும் 31-ம் தேதி முதல் 10,12-ம் வகுப்பு துணைத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்..!
10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 31-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெற்றது. 10-ம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8 வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றது.
இந்த நிலையில், 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் வரும் 31-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு http://dge.tn.gov.in இணையதளத்தை அணுகலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story