10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - கடைசி இடம் பிடித்த வேலூர்...!
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்து உள்ளது.
வேலூர்,
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. வேலூர் மாவட்டத்தில் 15,341 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 13,299 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 86.69 சதவீதமாக உள்ளது.
இந்த தேர்வில் மாணவர்கள் 5, 864 பேரும், மாணவிகள் 7,435 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதேபோன்று 17, 963 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில் 14,347 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . தேர்ச்சி விகிதம் 79.87 சதவீதமாக உள்ளது. தமிழக அளவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் வேலூர் மாவட்டத்தை விட 4 சதவீதம் அதிகமாக உள்ளது .
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்றும் ஆன்லைன் மூலமும் தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர்.