10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு
x

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை,

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் கடந்த மே மாதம் தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் மறுகூட்டலுக்கு பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தங்கள் விவரங்களை பயன்படுத்தி மறுகூட்டல் முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மறுகூட்டல் புதிய மதிப்பெண் சான்றிதழும் அன்றைய தினம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story