10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
x

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

கரூர் மாவட்டம், துளசிகொடும்பில் கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 10-ம் அரசு பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும்.

மாணவி வித்யபாரதி 500-க்கு 489 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி பவித்ரா 487 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மாணவிகள் ஜெயஸ்ரீ, பிரகதி, சுவாதி ஆகிய 3 மாணவிகள், விஷ்ணுவர்த்தன் என்ற மாணவனும் 485 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பெற்றுள்ளனர். கணிதத்தில் 6 பேரும், அறிவியலில் 9 பேரும் என மொத்தம் 15 பேர் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று பெருமை சேர்த்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தலைவர் கனகராஜ், செயலாளர் ஜெயபிரகாசம், பொருளாளர் முத்துசாமி, தாளாளர் பெரியசாமி, பள்ளியின் தலைமையாசிரியர் பத்மநாபன், அறக்கட்டளை நிர்வாகிகள், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story