10-ம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

கோப்புப்படம்
தமிழகத்தில் 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது இந்த தேர்வுக்கான அட்டவணையானது தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
இதில், காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





