தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
துறையூர் அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார்.
துறையூர் அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார்.
மாணவர்
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பெருமாள்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் பாலாஜி (வயது 15). இவர் துறையூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மகனின் படிப்புக்காக பாபு துறையூர் முட்டைக்கரை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாத பாலாஜியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கினார்.
தற்கொலை
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது, மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து, அதிர்ச்சி அடைந்து உடனடியாக மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.