10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

சேத்துப்பட்டு அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காவியா. இவர்களுக்கு 3 மகள்கள் உண்டு.

இரண்டாவது மகள் தீபா (வயது 15) சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று வீட்டு வேலை எதுவும் செய்வதில்லை என்று பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை மகேந்திரன், அவரது மனைவி காவியா ஆகியோர் கூலி வேலைக்கு சென்று விட்டனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகேந்திரன் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story