10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
துடியலூர்
நன்றாக படிக்கக்கூறி பெற்றோர் வலியுறுத்தியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
10-ம் வகுப்பு மாணவி
கோவை கவுண்டம்பாளையமம் கூட்டுறவு காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் ரித்திகா (வயது 15). இவர் 9-ம் வகுப்பு வரை மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். பின்னர் 10-ம் வகுப்பு தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி வெங்கடாபுரம் தடாகம் சாலையில் தனியார் பள்ளியில் சர்வதேச பாடத்திட்டத்திற்கு மாறியதாக தெரிகிறது.
இதனால் அவர் பாடங்கள் கடினமாக இருப்பதாக மனவேதனையுடன் இருந்து வந்தார். மேலும் பாடத்தை நன்றாக படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.
தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றாக படிக்கக்கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.