10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை


10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில், பதிவறை எழுத்தராக பணியாற்றி வருபவருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த அவர், தனது பராமரிப்பில் மகள்களை வளர்த்து வந்தார். அவரது 2 மகள்களும், அவர் பணியாற்றும் அதே பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மூத்த மகளான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மகள் என்றும் பாராமல் கடந்த சில நாட்களாக அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் வால்பாறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தியபோது, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பதிவறை எழுத்தரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


Next Story