10-ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை


10-ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை
x

10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வை எழுதாதவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

அதன்படி, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று (22.07.2022) வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் விவரங்களை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story