10-ம் வகுப்பு துணைத்தேர்வு தொடக்கம்


10-ம் வகுப்பு துணைத்தேர்வு தொடக்கம்
x

10-ம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் நடந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கும், தனித்தேர்வர்களுக்கும் துணைத்தேர்வு நேற்று தொடங்கியது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வு நேற்று நடந்தது. நேற்று நடந்த தமிழ் தேர்வை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 249 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் பெரம்பலூர் கல்வி மாவட்டத்துக்கு பெரம்பலூரில் அரசு உதவி பெறும் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் கல்வி மாவட்டத்துக்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணி வரை நடந்தது.

தமிழ் தேர்வை 197 பேர் எழுதினர். 52 பேர் தேர்வு எழுத வரவில்லை. இன்று (புதன்கிழமை) ஆங்கில தேர்வு நடக்கிறது. வருகிற 8-ந் தேதியுடன் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவடைகிறது. இதேபோல் 11-ம் வகுப்பு துணைத்தேர்வும் நேற்று தொடங்கியது. அவர்களுக்கு 10-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. ஏற்கனவே கடந்த 25-ந்தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு துணைத்தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story