மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் 10-ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா


மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் 10-ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
x

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் 10-ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது.

சேலம்

மேச்சேரி:

மேச்சேரியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேக நிறைவு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல இந்த ஆண்டு 10-ம் ஆண்டு மகா கும்பாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதையொட்டி விழா அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி பூஜை. காலை 7.30 மணி அளவில் மகா கணபதி பூஜை, சகஸ்ர நாம ஹோமம், 108 வலம்புரி சங்காபிஷேகம் போன்றவை நடத்தப்பட்டன. தொடர்ந்து மேச்சேரி ஆதிபராசக்தி மன்றங்கள் மற்றும் பக்தர்களின் பால் குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றத்தினரும், கோவில் நிர்வாகத்தினரும் செய்திருந்தனர்.


Next Story