பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
x
திருப்பூர்


வெள்ளகோவில் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனன், போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தாசவ நாயக்கன்பட்டி வட்டமலை கரை அணை அருகே சென்று பார்த்தபோது அங்கு பணம் வைத்து சூதாடிய கண்ணுச்சாமி (வயது 55) ஆறுமுகம் (42), கொடியரசு (55), சண்முகம் (52), சிவக்குமார் (47), சேமலையப்பன் (46), பூபதி (34), சிவகுமார் (43), செல்வகுமார் 42 பழனிசாமி (49), தர்மலிங்கம் (44) ஆகிய 11 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3,300 பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story