மது விற்ற 11 பேர் கைது
மது விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் மது விலக்கு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தில் மலையம்பாளையம், பவானிசாகர், வெள்ளோடு, கொடுமுடி, பங்களாபுதூர், பெருந்துறை, சிவகிரி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில் 11 பேர் மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 108 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story