ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 52 ஆயிரத்து 858 வாக்காளர்கள்


ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 52 ஆயிரத்து 858 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 52 ஆயிரத்து 858 வாக்காளர்கள்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சத்து 52 ஆயிரத்து 858 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் கலந்துகொண்டு வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார். அதனை பயிற்சி உதவி கலெக்டர் நாராயண சர்மா பெற்றுக் கொண்டார். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் கூறியதாவது:-

இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1371 பாகங்களில் 5,73,716 ஆண் வாக்காளர்களும், 5,79,080 பெண் வாக்காளர்களும் 62 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் ஆக மொத்தம் 11,52,858 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.

3,796 ஆண் வாக்காளர்களும், 4,690 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 12,097 ஆண் வாக்காளர்களும், 15,576 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலின வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பரமக்குடி தொகுதி

வரைவு வாக்காளர் பட்டியலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை கீழ்கண்டவாறு உள்ளது.

இதன்படி பரமக்குடி தனி தொகுதியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 2 ஆண் வாக்காளர்களும், 1லட்சத்து 26 ஆயிரத்து 394 பெண் வாக்காளர்களும், 23 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 581 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 44 ஆயிரத்து 668 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 270 வாக்காளர்கள் உள்ளனர்.

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 71 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 54 ஆயிரத்து 968 பெண் வாக்காளர்களும், 14 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 53 வாக்காளர்கள் உள்ளனர்.

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 62 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 53 ஆயிரத்து 50 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 116 வாக்காளர்கள் உள்ளனர். ஆக மொத்தம் 4 தொகுதிகளிலும் சேர்த்து 5 லட்சத்து 73 ஆயிரத்து 716 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 79 ஆயிரத்து 80 பெண் வாக்காளர்களும், 62 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 11 லட்சத்து 52 ஆயிரத்து 858 வாக்காளர்கள் உள்ளனர்.

சிறப்பு முகாம்

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேர்தல் ஆணைய இணையதளத்திலும் உள்ளதால் www.elections.tn.gov.in, www.nvsp.in-ல் பொதுமக்கள் சரிபார்த்து கொள்ளலாம். மேலும், வாக்காளர்களை சேர்ப்பதற்காகவும், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கும் வரும் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் மன்சூர், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Next Story