11 லட்சம் வாக்காளர்கள்


11 லட்சம் வாக்காளர்கள்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார். இதில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் 1.1.2023 தேதியை தகுதிஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி நேற்று முதல் தொடங்கியது. அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறும் இப்பணியில் 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இதரப்பணி மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் பணி கால அட்டவணை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 11,13,394 வாக்காளர்கள் உள்ளனர். இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில்,

மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு பேரணி

வாக்காளர்கள் பதிவுபெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணையம் இணையதளம் www.nvsp.in மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விபரத்தினை சரிபார்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, தேர்தல் தாசில்தார் பாலகுரு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி

பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் , டாக்டர் ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாணவ, மாணவிகள், தேசிய மாணவர் படை மாணவர்கள், நாட்டு நலப்பணிகள் திட்ட மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story