போலி லாட்டரி சீட்டு விற்ற 11 பேர் கைது


போலி லாட்டரி சீட்டு விற்ற 11 பேர் கைது
x

வெளிமாநில போலி லாட்டரி சீட்டு விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

லாட்டரி சீட்டு

பரமத்திவேலூர் மற்றும் பரமத்தியில் வெளிமாநில போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக வேலூர் மற்றும் பரமத்தி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த தங்கபாண்டி (வயது 24), ராஜ்குமார் (24), சதாசிவம் (25), கரூர் மாவட்டம், வெங்கமேட்டை சேர்ந்த மகாதேவன் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (60), சுங்ககாரன்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (37), கரூர் மாவட்டம், பொத்தனூரை சேர்ந்த ஆறுமுகம் (56) காந்தி நகரை சேர்ந்த சுப்பிரமணி (51) ஆகிய 8 பேரை வேலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.52 ஆயிரத்து 700-யும், 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

11 பேர் கைது

இதேபோல் பரமத்தியில் வெளிமாநில போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பரமத்தியை சேர்ந்த திருக்கேதீஸ்வரன் (29), திலீபன் (27) மற்றும் மறவாபாளையத்தை சேர்ந்த ரகு (26) ஆகிய 3 பேரை பரமத்தி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story