லாட்டரி சீட்டுகள் விற்ற 11 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 11 பேர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

லாலாபேட்டை எல்லைக்குட்ட பல்வேறு பகுதிகளில் லாலாபேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாலாபேட்டை மேலவிட்டு கட்டி பகுதியை சேர்ந்த ெரங்கசாமி (வயது 75), திம்மாச்சிபுரத்தை சேர்ந்த சேகர் (61), பொய்கை புத்தூர் பகுதியை சேர்ந்த அருள்நாதன் (56), தங்கராஜ் (65), சீகம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜ்முகமது (73), வீரவள்ளியை சேர்ந்த சிவகுமார் (40), சந்தப்பேட்டையை சேர்ந்த ரவி (62), தீர்த்தம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (47), பொய்கைபுத்தூரை சேர்ந்த காமராஜ் (58), வீரவல்லியை சேர்ந்த சேகர் (48), லாலாபேட்டையை சேர்ந்த ஷேக்மைதீன் (46) ஆகிய 11 பேரும் பல்வேறு இடங்களில் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story