சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர்
ஆனைமலை
ஆனைமலை அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் சேவல் சூதாட்டம் நடப்பதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆனைமலை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது மீனாட்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த அஸ்வின் (வயது 29), செல்வ மணிகண்டன் (20), ராஜு (31), சிபி ராஜா (31), பிரதீப் குமார் (20), ஆகாஷ் (22), மணிகண்டன் (23), பிரபாகரன் (30) ஆகிய 8 பேர் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வாகனங்கள், சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் ஒடையகுளம் பகுதியில் ேசவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட வேட்டைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்த சூர்யா (22), ரமேஷ்குமார் (29), சூர்யா (18) ஆகிய 3 பேரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






