சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பாதிப்பு


சேலம் மாவட்டத்தில்  கொரோனாவுக்கு 11 பேர் பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

சேலம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 13 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 7 பேர், தலைவாசலில் 2 பேர், ஓமலூர், வாழப்பாடி ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் உள்பட 55 பேர் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 4 பேர் குணமடைந்து, நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story