பொள்ளாச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது


பொள்ளாச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2022 1:30 AM IST (Updated: 19 Sept 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் தலைமையில் போலீசார் ராமபட்டிணம் பிரிவில் இருந்து நாதேகவுண்டன்புதூர் செல்லும் பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது அங்குள்ள வாய்க்கால்மேடு பகுதியில் சட்டவிரோதமாக சிலர் சீட்டு விளையாடிக்கொண்டு இருப்பதை கண்டனர்.

இதனையடுத்து, அங்கு சீட்டு விளையாடிக் கொண்டு இருந்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்த ஷேக் முஸ்தபா (வயது 36), செந்தில்குமார் (41), பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (60), சண்முகம், (50), கருப்பசாமி (47), பாரதி (55), மனோகரன் (49),பத்மநாபன் (42) என்பவர் உள்பட 11 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சூதாட்டப்பணம் ரூ.28 ஆயிரத்து 925 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story