மது விற்ற- சூதாடிய 11 பேர் கைது
மது விற்ற- சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
மணப்பாறை:
போலீசார் ரோந்து
மணப்பாறை பகுதியில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாகவும், பணம் வைத்து சூதாடுவதாகவும் மணப்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு கண்காணித்தனர்.
இதில் மது விற்ற விமல்(வயது 30), நாகராஜ்(48) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கைது
இதேபோல் காட்டுப்பட்டி மற்றும் வீரப்பூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜா(34), ரெத்தினவேல்(37), கண்ணன்(40), தேவேந்திரன்(41), ரெத்தினகுமார்(44), கந்தசாமி(37), முனியப்பன்(45), சண்முகம்(35), சிவநேசன்(36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story