புகையிலை பொருட்கள் விற்ற 11 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரையூர்
மதுரை மாவட்டம் வில்லூர், டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, பேரையூர், போலீசார் புகையிலை பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக ரோந்து சென்றனர். எம்.புளியங்குளத்தை சேர்ந்த வீரபாண்டி (வயது 59) என். முத்துலிங்காபுரத்தை சேர்ந்த வேல்முருகன் (22) எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த ஜெயராம் (63) சின்னக்கட்டளையை சேர்ந்த பிச்சை (60), பேரையூரை சேர்ந்த முருகன் (49), மற்றொரு முருகன் (50) ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்ததாக ரோந்து சென்ற போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். இதே போல கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்திபாலாஜி மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் அய்வத்தான்பட்டியில் சுரேஷ் (40), பள்ளபட்டியை சேர்ந்த ரஹமத்துல்லா (34), ஆறுமுகம் (40), சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சுதாகரன் (24), சேது (70) ஆகிய 5 பேரை புகையிைல பொருட்கள் விற்றதாக கைது செய்தனர்.