திருத்தணி அருகே ஷேர் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்


திருத்தணி அருகே ஷேர் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
x

திருத்தணி அருகே ஷேர் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர்

11 பேர் படுகாயம்

திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் நேற்று சாலை வளைவில் திரும்ப முயன்ற ஷேர் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 குழந்தைகள் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 4 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

துக்க நிகழ்ச்சியில்

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்த சரசா, பெருமாள், லட்சுமி, வள்ளியம்மா, சுகுணா, திவ்யா, வசந்தா, ராஜி மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேரும் திருத்தணி அடுத்த டி.புதூர் மேடு பகுதியில் வசிக்கும் சற்குணம் என்பவரது வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஷேர் ஆட்டோவில் புலிவலம் கிராமத்தில் இருந்து திருத்தணிக்கு வந்து கொண்டிருந்தனர், கன்னிகாபுரம் அருகே சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆட்டோவை அதே கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது படுகாயம் அடைந்த டிரைவர் உள்பட 11 பேரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story