சேலம் வந்த 11 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம் வந்த 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

பிறமாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 32 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 33 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15 பேர், தலைவாசலில் 3 பேர், சேலம் ஒன்றியத்தில் 2 பேர், ஓமலூர், வீரபாண்டி ஆகிய இடங்களில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

மேலும் சேலத்துக்கு தர்மபுரியில் இருந்து வந்த 4 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த 3 பேர், கரூர், சென்னையில் இருந்து வந்த தலா 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 30 ஆயிரத்து 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story