ஆம்னி பஸ்சில் 11 பவுன் நகை மாயம்


ஆம்னி பஸ்சில் 11 பவுன் நகை மாயம்
x

சென்னையில் இருந்து நெல்லை வந்த ஆம்னி பஸ்சில் 11 பவுன் நகை மாயமானது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை பெருமாள்புரம் கனரா வங்கி காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58). இவர் சம்பவத்தன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு ஆம்னி பஸ்சில் தனது மனைவியுடன் வந்தார். பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர்கள் கொண்டு வந்த கைப்பை பஸ்சில் மாயமானது தெரியவந்தது. அந்த கைப்பையில் 7 பவுன் தங்க சங்கிலி, 3¾ பவுன் தங்க நெக்லஸ் மற்றும் ரூ.5 ஆயிரம், ஒரு ஏ.டி.எம். கார்டு இருந்தது.

இதுகுறித்து அவர் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நகைகளை யாராவது திருடி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story