வாடகை பாக்கி செலுத்தாததால் 11 கடைகளுக்கு சீல்


வாடகை பாக்கி செலுத்தாததால் 11 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

சின்னசேலத்தில் வாடகை பாக்கி செலுத்தாததால் 11 கடைகளுக்கு சீல் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் பேரூராட்சிக்கு சொந்தமான அண்ணாவணிக வளாகம், சேலம் மெயின் ரோட்டில் உள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள 29 கடைகளை பேரூராட்சி நிர்வாகம் மாத வாடகைக்கு விட்டுள்ளது.

இந்த நிலையில் கடையை வாடகைக்கு எடுத்தவர்கள் மாத வாடகை பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அனுப்பி எச்சரித்தும் இதுவரை வாடகை பணத்தை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து பேரூராட்சிகள் துறை உதவி இயக்குனர் உத்தரவின்படி சின்னசேலம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று அண்ணா வணிக வளாகத்தில் வாடகை பாக்கியை செலுத்தாத 11 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அப்போது வாடகை பாக்கி நிலுவையை விரைவில் செலுத்த வேண்டும் என கடை நடத்தி வந்தவர்களிடம் அறிவுறுத்தினர்.


Next Story