பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 191 மாணவ-மாணவிகள் எழுதினர்


பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 191 மாணவ-மாணவிகள் எழுதினர்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 191 மாணவ-மாணவிகள் எழுதினர்.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 191 மாணவ-மாணவிகள் எழுதினர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட தியாகி ஜி.நாராயணசாமி மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மையத்தை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 5 ஆயிரத்து 134 மாணவர்களும், 6 ஆயிரத்து 57 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 191 மாணவ, மாணவிகள் எழுதினர்.

90 பறக்கும் படையினர்

மாவட்டத்தில் 36 பொதுத்தேர்வு மையங்களும், 2 தனித்தேர்வர்களுக்கான மையங்களும் என மொத்தம் 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணித்திட 824 அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் 90 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தடையில்லா மின்சாரம்

மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்கள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கும் பிளஸ்-1 பொதுத்தேர்வை 4 ஆயிரத்து 446 மாணவர்களும், 5 ஆயிரத்து 565 மாணவிகளும் என சேர்த்து மொத்தம் 10 ஆயிரத்து 11 பேர் எழுத உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் யுரேகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story