ரூ.110 கோடியில்புதிய மேம்பாலம்


ரூ.110 கோடியில்புதிய மேம்பாலம்
x
தினத்தந்தி 27 July 2023 12:30 AM IST (Updated: 27 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிங்காநல்லூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.110 கோடியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.

கோயம்புத்தூர்

கோவை

சிங்காநல்லூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.110 கோடியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.

போக்குவரத்து நெரிசல்

சிங்காநல்லூர் பஸ் நிலைய சிக்னல் பகுதியில் திருச்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியது உள்ளது. தற்போது தடுப்புகள் அமைத்து திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் நெரிசல் குறையவில்லை. காலை மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு மறறும் தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் நீண்டநேரம் காத்திருந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.

சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. மெட்ரோ ரெயில் திட்டத்தை காரணம் காண்பித்து இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்தநிலையில் மெட்ரோ ரெயில் முதல் திட்டப்பணிகள் திருச்சி ரோடு பகுதியில் அமைக்கப்படாததால், மேம்பாலத்துக்கான டெண்டரை அரசு கோரி உள்ளது.

ரூ.110 கோடியில் மேம்பாலம்

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- சிங்காநல்லூரில் ரூ.110 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான டெண்டர்விட அரசு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை இ-டெண்டர் கோரி உள்ளது.

ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதும் மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். இதன் மூலம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story