110 லிட்டர் சாராயம் பறிமுதல்


110 லிட்டர் சாராயம் பறிமுதல்
x

நாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவுறுத்தல்படியும், சாராய கடத்தலை தடுக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் மோட்டார் சைக்கிள் அருகே கிடந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் 110 லிட்டர் சாராயம் இருந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும், 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story