115 இருசக்கர வாகனங்கள் ஏலம்


115 இருசக்கர வாகனங்கள் ஏலம்
x

115 இருசக்கர வாகனங்கள் ஏலம்

திருப்பூர்

திருப்பூர்

அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 115 இருசக்கர வாகனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வாகனங்களுக்கான உரிமையாளர்களுக்கு தகவல் அனுப்பியும் இதுவரை எவரும் உரிமை கோரவில்லை. 115 வாகனங்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வடக்கு தாசில்தார் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்படும். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு இருசக்கர வாகனங்களை பார்வையிடலாம். இந்த தகவலை திருப்பூர் வடக்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

----


Next Story