சென்னையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 1,198 டன் உரம் வந்தது


சென்னையில் இருந்து சரக்கு ரெயில் மூலம்    சின்னசேலத்துக்கு 1,198 டன் உரம் வந்தது
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 1,198 டன் உரம் வந்தது.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

அதிகாரிகள் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர நிறுவன நிலையங்களில் யூரியா 2 ஆயிரத்து 612 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,185 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,232 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 684 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 3,967 மெட்ரிக் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான எம்.எப்.எல். யூரியா 956 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 242 மெட்ரிக் டன் உரம் சென்னை உர தொழிற்சாலையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. இதனை வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் மற்றும் வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) முத்துராஜ் ஆய்வு செய்தனர்.

கூட்டுறவு சங்கங்கள்

அதன்பிறகு சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் ரெயிலில் இருந்து உர மூட்டைகளை இறக்கி லாரிகளில் ஏற்றி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களுக்கு தேவையான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் அரசு நிர்ணயித்த விலையில் வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படுத்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்களை பயன்படுத்துமாறு வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story