அரியலூரில் 12-ந்தேதி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்
ஆள் குறைப்பு அரசாணையை ரத்து செய்யக்கோரி அரியலூரில் 12-ந்தேதி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
அரியலூர்
ஜெயங்கொண்டம் நகராட்சி ஏ.ஐ.டி.யு.சி. தூய்மை பணியாளர்கள் சங்க கூட்டம் சிலம்புச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில், துரை, சிவகுமார், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை ஆள் குறைப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை முழுவதும் கபளிகரம் செய்யும் அரசாணை (10)-ஐ ரத்து செய்யக்கோரி வருகிற 12-ந் தேதி அரியலூரில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் அனைத்து தொழிலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தூய்மை பணியாளர்களும் விடுப்பு எடுப்பது எனவும், ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய 52 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க ேவண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story